தேவேந்திர குல மக்கள் முன்னேற்ற பேரவை மாநில செயற்குழு கூட்டம் மற்றும் 2019 லோக் சபா தேர்தல் நிலைப்பாடு விளக்க கூட்டம் ராமநாதபுரம் தாஜ் மினி மகாலில் நடந்தது. நிறுவனத் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் ஜி. மர்சலின், மாநில தலைமை நிலைய செயயாளர் ஆசாத், மாநில இளைஞரணி செயலர் தவ அஜித், மாநில வழக்கறிஞர் அணி செயலர் ஜெகதீஷ் பாண்டியன், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் மருதகுமார், ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் சங்கர், மாவட்ட பொருளாளர் ராஜா, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் பூவேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகதாஸ், தூத்துக்குடி மாவட்ட தலைவர் முனியசாமி பாண்டியன், நெல்லை மாவட்ட செயலாளர் முருகேச பாண்டியன், பரமக்குடி ஒன்றிய செயலாளர் சுனில், திருப்புவனம் ஒன்றிய செயலாளர் பாலசந்தர் மற்றும் பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தேவேந்திர குல வேளாளர் மக்களை தேவேந்திர குல வேளாளர் என ஒரே பிரிவாக அறிவிக்கும் அரசாணை வெளியிட வேண்டும், பரமக்குடி செப்.11 ல் நடைபெறும் இமானுவேல் சேகரன் குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.


You must be logged in to post a comment.