இராமநாதபுரத்தில் அகமுடையார் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா…

இராமநாதபுரம் மாவட்டம் இந்து ராஜ குல அகமுடையார் அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளை 4 ஆம் ஆண்டு துவக்க விழா, சமுதாய அரசியல் விழிப்புணர்வு விழா, சொர்க்க ரதம்     அர்ப்பணிப்பு விழா நடந்தது. இக்கூட்டத்திற்கு பாரதிநகர் அகமுடையார் முன்னேற்ற சங்க தலைவர் கே. சுரேஷ் தலைமை வகித்தார்.     செயலர் ரமேஷ் வரவேற்றார்.  அகமுடையார் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இராமநாதபுரம் நகரில் மருதுபாண்டியர் சிலை அமைக்க இடம் ஒதுக்க வேண்டும், தேர்தல்களில் அகமுடையார் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்காத அரசியல் கட்சியை புறக்கணிக்க முடிவு செய்தல், மன்னர் மருது பாண்டியர் கட்டிய சங்கர பதி கோட்டையை அரசு உடனடியாக  புனரமைக்க வேண்டும்,  நாடாளுமன்ற வளாகத்திலும், சென்னையிலும் மருது பாண்டியர் சிலை அமைக்க வேண்டும் , மருதுபாண்டியர்கள் வாழ்க்கை வரலாற்றை பாடப் புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பாம்பன் ராஜாஜி, கருணாநிதி, ராமேஸ்வரம் குருசாமி, நாராயணமூர்த்தி, ரஜினிகாந்த், ஜெயமணி,   மருதுபாண்டியன், பாலமுருகன், விஜய ராமகிருஷ்ணன்,    இளையராஜா , பிரவின், செந்தில்குமார், மலைக்கண்ணன் ,நாக பாஸ்கர் ,குணா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பாரதிநகர் அகமுடையார் முன்னேற்ற சங்க பொருளாளர் ரெத்னக்குமார் நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!