இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முன்னேற விளையும் ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மத்திய இரும்பு, கனரக தொழில் துறை இணை அமைச்சர் ஸ்ரீபூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா, தமிழக பால்வளம், கதர்த்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அமைச்சர் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் முன்னேற விளையும் மாவட்டங்களாக ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு துறை மூலம் வளர்ச்சித் திட்டத்த பணிகள் செயல்படுத்தப்பட்டு தனிமனித வளர்ச்சி திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் மருச்சுகட்டி ஊராட்சியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணி ஆய்வு செய்யப்பட்டது. பரமக்குடியில் வேளாண் துறை மூலம் விதை சுத்திகரிப்பு நிலையம் கட்டடம் கட்டுமானப்பணிகள் பார்வையிடப்பட்டது. சத்திரக்குடியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 வது நிதிக்குழு திட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டப்பணிகள் பார்வையிடப்பட்டது. எட்டிவயல் ஊராட்சியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் மிளகாய் குளிர்பதன கிட்டங்கி பார்வையிடப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படித்த ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டு உட்கட்டமைப்புகள் மேம்படுத்துவதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன. பாம்பன் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் பார்வையிடப்பட்டது.
ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், உச்சிப்புளி, புதுமடம் பகுதிகளை பார்வையிட்டு வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் திட்டப்பணிக்கு ஜல் ஜீவன் திட்டம் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. வேளாண், கூட்டுறவ, மருத்துவம், கல்வி, பொதுப்பணி, நெடுஞ்சாலை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. ராமேஸ்வரம் சுற்றுலா தளமாக திகழ்ந்து வருவதால் விரிவுபடுத்த தேவையான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மத்திய இரும்பு, கனரக தொழில்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா தெரிவித்தார்.
தர்மர் எம்பி, முருகேசன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு அவர்கள், பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.