தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஓய்வூதியர் தின கருத்தரங்கு நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் மணிக்கண்ணு வரவேற்றார். ஓய்வூதியர்களும் மருத்துவமும் குறித்து டாக்டர் சந்திரசேகரன் பேசினார். மூத்தோர் 3 பேர் கவுரவிக்கப்பட்டனர். மாநில துணைத்தலைவர் குப்பன் சிறப்புரை ஆற்றினார். ஓய்வூதியர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், செயலாளர் விஜயராகவன், முதுகுளத்தூர் வட்ட தலைவர் சிவனுபூவன், மாநில செயற்குழு உறுப்பினர் பிச்சை, போக்குவரத்து ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் கேசவன், மாரிமுத்து, பவுல்ராஜ், மின்வாரிய ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் மாலா, சேவியர் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டமைப்பு மாவட்ட பொருளாளர் ராமச்சந்திர பாபு நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.