நவீன உலகத்தில் எல்லாம் புதுமை. நாம் அன்றாட செய்யும் செயல்களில் இருந்து உண்ணும் உணவில் தொடங்கி வியாபாரம் புதுமை புகுந்த வண்ணம் உள்ளது. இன்றைய உலகமே இன்டெர்நெட்டை மையமாக கொண்டுதான் இயங்கி வருகிறது. அந்த அடிப்படையில் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் நாளை கீழக்கரை சீனி அப்பா வணிக வளாகத்தில் திறக்கப்பட இருக்கும் “ Meet & Eat Chat House” எனும் உணவகத்தில் உணவருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவச இன்டெர்நெட் வசதி செய்துள்ளார்கள்.
மேலும் இந்த உணவகத்தில் கிழக்கரை, காயல்பட்டினம் பகுதியின் பாரம்பரிய உணவான மஞ்ச சொறு, கருவாட்டு ஆணம், தேங்காய் சோறு, இடியாப்ப சோறு, வட்டலாப்பம், கணவாய், நோன்பு கஞ்சி, தாழ்ச்சா குழம்பு போன்ற உணவு வகைகள்வீ ட்டு சுவையுடன் கிடைக்கும் என்பது சிறப்பு அம்சமாகும்.
அதே போல் இந்த உணவகத்தில் ஆப்பம், இடியாப்பம், சூப், பீஃப் ஃப்ரை போன்ற உணவுகளும் கிடைக்கும். மேலும் திறப்பு விழா சலுகையாக நாளை (24-11-2017) மாலை 4.30 முதல் 5.30 மணி வரை பீஃப் பக்கோடா மற்றும் நோன்பு கஞ்சி ஆகியவை வருகையாளர்களுக்கு சுவையுடன் விருந்தளிக்க உள்ளார்கள். இத்தொழில் சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறது. மேல் விபரங்களுக்கு 9840284047, 9092606006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










