தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார் பட்டியில் தென் பொதிகை வியாபாரிகள் நலச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், சங்கத் தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. சங்க செயலாளர் நவாஸ்கான் வரவேற்பு உரையுடன் துவங்கிய இந்த கூட்டத்தில், வியாபாரிகள் நல வாரியத்தில் உறுப்பினராக அனைத்து வியாபாரிகளும் பதிவு செய்து கொள்ள ஏதுவாக, சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் இலவச பதிவு முகாமில் கலந்து கொண்டு, அனைத்து வியாபாரிகளும் உறுப்பினர்களாக பதிவு செய்து பயன் பெற வேண்டும் என்ற தீர்மானம் முன் மொழியப்பட்டது.
மேலும், வியாபாரிகள் வியாபாரக் கடன் பெறுவதற்கு முதலியார் பட்டியில் நடைபெற உள்ள உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் கலந்து கொண்டு, வியாபாரிகள் வங்கி கடன் பெறுவது சம்பந்தமான ஆலோசனைகளை எடுத்துக் கூறினார். கூட்டத்தில் பொதுக் குழு உறுப்பினர்கள் தங்கையா, காதர், மீரான், பிச்சையா, கவுன்சிலர் மணிகண்டன், ஹெர்லின், முஸ்தஃபா நூராணி, இப்ராஹிம், சண்முகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் பாக்யராஜ் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.