மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள அவனியாபுரத்தில் கி.பி. 6ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய காலத்திய பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.மதுரை திருவிளையால் புராணங்களில் மீனாட்சி குழந்தையாக இருக்கும்போது விளையாடிய திருத்தலமாக இக் கோயில் கருதப்படுகிறது.மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டி நடைபெறும் திருவிழாவைப் போல் அவனியாபுரம் பாலம் மீனாம்பிகை திருக்கோயிலும் கொடியேற்றத்துடன் துவங்கி திக்விசயம் திருக்கல்யாணம் பூப்பல்லாக்கு போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதனையொட்டி இன்று மாலை எட்டு மணியளவில் பாலா மீனாபியை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பூப்பல்லாக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் குருக்கள் நாகசுப்பிரமணியன், சந்திரசேகர் பக்தர்கள் இணைந்து வைபோகத்தை நடத்தி வைத்தனர். கோவில் செயல் அலுவலர் சங்கரேஸ்வரி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், ஹிந்து அறநிலைய பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்

You must be logged in to post a comment.