ஒரு நாள் மருந்து கடைகள் அடைப்புக்கு ஒத்துழைப்பு தர கீழக்கரை மருந்து வர்த்தக சங்க தலைவர் வேண்டுகோள்

இந்தியா முழுதும் ஒரு நாள் மருந்து கடைகள் அடைப்பு வரும் 27/09/2018 அன்று மருந்து விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக தேசிய அளவில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்சமயத் ஆன்லைன் விற்பனைக்கு மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து, வருகின்ற 28.09.18. வெள்ளிக் கிழமை ஒரு நாள் மத்திய அரசை கண்டித்து மருந்து கடைகள் முழுவதையும் அடைத்து, ஆன்லைன் விற்பனைக்கான எதிர்ப்பை  மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவும், ஆன்லைன் வர்த்தகத்தால் ஏற்படும் தீமைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நாளை முதல் மருந்து கடையில் உள்ள விற்பனையாளர் அனைவரும் ஒரு வார காலத்திற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து இருப்பார்கள் என்றும், அத்தியாவசியமான மருந்துகளை வாங்கி வைத்து மக்கள் மருந்து கடைகளுக்கு ஆதரவு தர வேண்டுகிறோம்” என  கீழக்கரை மருந்து விற்பனையாளர் வர்த்தக சங்க தலைவர் சுந்தரம் கூறியுள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!