இராமநாதபுரம் பாத்திமா நகரில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை தரம் பிரிப்பு கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. இதனை அறிந்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் அஸ்திவாரம் தோண்டும் பணியில் ஈடுப்பட்டிருந்த ஜே.சி.பி. இயந்திரத்தை தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து பாத்திமா நகர் முகமது இஸ்மாயில் கூறுகையில், “நகராட்சிக்கு சொந்தமான இடம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. பாத்திமா நகர், தங்கப்பா நகரில் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த இடத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டி மக்கும், மக்காத குப்பை என தரம் பிரிப்பு கட்டடம் கட்டும் பணியைதான் பாதியில் தடுத்து நிறுத்தியுள்ளோம், காரணம் பாத்திமா நகருக்கு அருகிலேயே சுடுகாடு உள்ளது. அதன் துர்நாற்றமே தாங்க முடியாத நிலையில் பல்வேறு நோய்களுக்கு இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம். ஏற்கனவே இப்பகுதியில் இருந்த குப்பைக்கிடங்கு குடியிருப்போர் அதிகரித்ததால் சக்கரக் கோட்டை பகுதிக்கு மாற்றம் செய்தனர். இந்நிலையில் குப்பை தரம் பிரிக்கும் இடமாக மாற்றுவதை அனுமதிக்க இயலாது. குடியிருப்புகள் அதிகமாக இருப்பதால் நகராட்சி நிர்வாகம் இந்த இடத்தை பூங்காவாக மாற்றித் தர வேண்டும். குப்பை கிடங்காக மாற்றினால் பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என்றார்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.




You must be logged in to post a comment.