தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் அருகே மருந்து கடை உரிமம் மட்டும் பெற்று கொண்டு மருத்துவமனை போன்று போலியாக செயல்பட்டு வந்த தனியார் மெடிக்கலுக்கு சீல் வைக்கப்பட்டது. தென்காசி மாவட்ட மருத்துவ அதிகாரி இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா அதிரடி ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பெயரில், இயக்குனர் நலப் பணிகள் மருத்துவர் பிரேமலதா போலி மருத்துவர்களையும், போலி மருத்துவ மனைகளையும் ஒழிக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக ஆலங்குளம் தாலுகா, வீ.கே.புதூர் அருகே கழுநீர் குளம் பகுதியில் தனியார் மருந்துக்கடையில் போலி மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட மருத்துவ அதிகாரி மருத்துவர் பிரேமலதா 22.8.2023 மாலை 4:45 மணியளவில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்திய, பயன்படுத்தப்பட்ட ஊசி, மாத்திரைகள் மற்றும் பொருட்கள் கண்டறியப்பட்டது. மருந்து கடை உரிமம் மட்டும் பெற்று கொண்டு, கிளினிக் நடத்திட மருத்துவ ஸ்தாபன சட்டத்தின் படி பதிவு சான்று பெறாமல், மருத்துவம் பயிலாத நபர் அப்பாவி பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கி, அப்பாவி பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற போலிகளை தடுக்கும் வகையில், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர், மருத்துவர் அருள் ஜோதி, சுகாதார ஆய்வாளர்கள் அருண் மற்றும் ஆனந்தராஜ், தென்காசி இணை இயக்குனர் நலப் பணிகள் அலுவலக கண்காணிப்பாளர் மீனா, ரெவென்யு இன்ஸ்பெக்டர் மாலினி, VAO, மற்றும் காவல்துறை முன்னிலையில் கடை சீல் வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை குறித்து இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா கூறும் போது, பொதுமக்கள் மருத்துவம் பயிலாத இது போன்ற நபர்களிடம் சிகிச்சை பெறுவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் அரசு துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை என சுகாதார கட்டமைப்பு சிறப்பாக தமிழகத்தில், குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்தி, உடல் நலம் பெற்று வளமோடு வாழ வேண்டும். போலி மருத்துவர்களை நாடி உடல் நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









