சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்..

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தானம் அறக்கட்டளை சோலை வட்டார களஞ்சியம் மாவட்ட பார்வையிழப்பு சங்க நிதி உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி தலைமை ஆசிரியை பூங்கொடி பேங்க் ஆப் இந்தியா மேலாளர் கனகராஜ் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுபா நந்தினி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர் மதுரை கிராமப்புற மண்டல சுகாதார ஒருங்கிணைப்பாளர் முத்தையா வரவேற்றார் இந்த முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் 160 கண் நோயாளிகளுக்கு பரிசோதனை  செய்தனர் இதில் 50 பேர் ஆபரேஷனுக்கு தேர்வு செய்து உள்ளனர் 16 நபர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது சோலை வட்டார களஞ்சியம் பணியாளர் மகாலட்சுமி நன்றி கூறினார்…

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!