முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சார்பாக இலவச மருத்துவ முகாம் இன்று (30/01/2020) காலை 10.00 மணியளவில் நடைப்பெற்றது.
இம்முகாம் சிறப்பாக நடைபெற முகம்மது சதக் நிறுவாகத் தலைவர் S.M.முகம்மது யூசுப், செயலாளர் S.M.H சர்மிளா, இயக்குனர் P.R.L.S ஹமீது இப்ராகீம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இம்முகாமை கல்லூரி இயக்குனர் P.R.L.S ஹமீது இப்ராகீம் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் மாணவிகளுக்கு காலை உணவை உட்கொள்வதின் அவசியத்தை எடுத்துரைத்தும், மருத்துவர்கள் அனைவரையும் வரவேற்றும் வரவேற்புரை ஆற்றினார்.
முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக மருத்துவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மாணவிகளுக்கு மருத்துவர்கள் உடல்நலத்தை எவ்வாறு பேணுதல் வேண்டும் என்று எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர் அனைவருக்கும் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது. இந்நிகழ்வை யூத் ரெட் கிராஸ் குழு சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print


















