ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கடம்பூர் காச நோய் அலகு திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் திட்டம், ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மருத்துவமனை கண்காணிப்பாளர் ஏ.கமலவாசன், நிலைய மருத்துவ அலுவலர் கே.பூவேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க தலைவர் ஜி.பாபு வரவேற்றார். ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் கே.ராஜகோபாலன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மருத்துவ பணிகள் துணை இயக்குநர் (காசம்) மருத்துவர் கே.சுந்தரலிங்கம் தலைமை வகித்து பேசும்போது, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் நுண்கதிர் மற்றும் சிபிநாட் முறையில் சளி பரிசோதனை செய்யப்பட்டு, காச நோய் இருப்பது கண்டறிந்தால் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தை பொருத்தவரை காச நோய் பாதித்த நோயாளிகளுக்கு திடமான உணவு எடுத்துக்கொள்ள மாதந்தோறும் அரசு ரூ.500 வழங்கி வருகிறது. அதே போல் உழவர் அட்டை வைத்துள்ள நோயாளிகளுக்கு ரூ. ஆயிரம் வழங்கி வருகிறது. இவற்றை காச நோய் பாதித்தவர்கள் பயன்படுத்தி, உடல் நலத்தை பேண வேண்டும், என்றார்.
நிகழ்ச்சியில், அங்கன்வாடி பணியாளர்கள் காச நோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை கடம்பூர் காச நோய் அலகு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் கு.காசி விஸ்வநாதன் செய்திருந்தனர்.
செய்தி:- அஹமது ஜான், தூத்துக்குடி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!