தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன், லைன்ஸ் கிளப் ஆஃப் வத்தலக்குண்டு ஈடன் கார்டன்,மற்றும் மதுரை தேவகி சிறப்பு மருத்துவ மனை, இணைந்து வத்தலக்குண்டு அஸ்மா மஹாலில் மருத்துவ முகாம் நடத்தினர்,
இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் எம் உதயகுமார், மற்றும் நிலக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலகுமார்,மற்றும் (WJUT) தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகை யாளர் சங்கத்தின் மாநில இணை செய்தி தொடர்பாளர், அஸ்கர், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சிறப்பாக செயல்பட்ட, WJUT திண்டுக்கல் மாவட்ட தலைவர் மற்றும் மாநில இணை செய்தி தொடர்பாளர், J.அஸ்கருக்கு , தமிழ் நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியனின், மாநில அமைப்புச் செயலாளர் வதிலை ரஃபீக், மற்றும் மாவட்ட செயலாளர் பாண்டித்துரை அவர்களால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்,



You must be logged in to post a comment.