கீழக்கரை வடக்குத் தெரு கருணை தெருவில் வசித்து வரும் ஒருவருர் சமீப காலமாக இருதய நோயால் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் இவருக்கு இருதயத்தில் அடைப்பு உள்ளதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்யுமாறு தனியார் மருத்துவமனையில் அறிவுறுத்தினர். ஆனால் பல அமைப்புகளை தொடர்பு கொண்டும் அவரால் எதிர்பார்த்த தொகையை ஏற்பாடு செய்ய முடியவில்லை.
இந்நிலையில் அவருக்கு உதவும் விதமாக கீழக்கரை நகர் நல இயக்கம் பசீர் மரைக்கா சென்னை மருத்துவமனையில் அம்மா காப்பீட்டு திட்டத்தில் மருத்துவம் பெறுவதற்கான எல்லா வசதிகளையும் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா மூலமாக செய்து கொடுத்தார். அதே போல் சம்பந்தப்பட்டவரின் உடனடி தேவைகளுக்கான பொருளாதார உதவியை கீழை நியூஸ் நிர்வாகமும், கீழக்கரை நகர் நல இயக்கமும் ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்வில் கீழக்கரை நகர் நல இயக்கம் பசீர் மரைக்கா மற்றும் கீழைநியூஸ் கீழக்கரை சட்டப்பபோராளிகள் ஒருங்கிணைப்பாளர் சாலிஹ் ஹுசைன் உடனிருந்தார்.



DONT PUBLISHED HIS/HER NAME IN SOCIAL MEDIA.
உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது