பெருநாளைக்கு தயாராகும் கறிக்கடைகள்.. வரத்து குறைவால் விலை உயரும் அபாயம்….

ஈகைப் பெருநாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பெருநாளைக்கு முக்கிய பங்கு வகிக்கும் கிடாக்கறி வியாபரிகளும் பெருநாள் வியாபாரத்திற்கு தயார்படுத்த தொடங்கிவிட்டார்கள். இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளதால் கடைகளில் கிடாக்களின் வரவு குறைவாகவே உள்ளது.

இது சம்பந்தமாக இத்தொழிலில் பல வருடங்களாக இருக்கும் ஜலீல் என்பவரிடம் கேட்ட பொழுது, இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருப்பதால், சந்தையில் குறைந்த அளவே விற்பனைக்கு வந்துள்ளது, மேலும் கிடாவின் விலையும் சராசரி விலையை விட அதிகமாகவே உள்ளது. அதையும் மீறி இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக கொண்டு வந்தால் கீழக்கரையில் மேய்ச்சல் விடுவதற்கு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வசதியில்லை என்றார்.

தற்சமயம் கீழக்கரையில் ஒரு கிலோ அதிகபட்சம் ₹.500 வரை விற்கப்படுகிறது. ஆனால் பெருநாள் சமயத்தில் வரத்து குறைவாக இருப்பதாலும், தேவைகளும் கூடுதலாக இருக்கும் என்பதால் விலை ஏறிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!