திருப்பரங்குன்றம் தொகுதி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா சரவண பொய்கை அறிய தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அதிமுக அரசு செய்த நலதிட்டங்களை கூறி ஓட்டு சேகரித்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் பேருந்து நிலையம் கார் பார்க்கிங் அமைத்து தரவும், மயில்கள் பாதுகாப்பாக இருக்க சரணாலயம் ஏற்படுத்தித் தரவும், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் சென்டர் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தி தரவும், 3 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும், வடபழஞ்சி தொழில்நுட்ப பூங்கா துவங்கி 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடவும், தென்கால் கண்மாயில் படகு குழாம் அனைத்து படகு சவாரி ஏற்பாடு செய்து சுற்றுலாவை மேம்படுத்த உறுதியாக கூறுகிறேன்” என்றார்.
மேலும் மல்லிகை மலர் சென்ட் தொழிற்சாலை அமைத்தல், வலையன்குளம் பகுதியில் காய்கறிகள், பழங்கள் பதனிடும் தொழிற்சாலை அமைக்கப்படும் என தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.