தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் ஆய்வக களப் பயணமாக ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரிக்கு சென்று ஆய்வகங்களை ஆர்வமாக பார்வையிட்டனர்.இப்பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொடர்ந்து ஏழாம் ஆண்டாக கல்லூரி ஆய்வக சோதனை கூடங்களுக்கு நேரில் களப் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வக களபயணம் வந்தவர்களை கல்லூரி விலங்கியல் துறை தலைவர் நாவுக்கரசு வரவேற்றார்.கல்லூரி முதல்வர் சிந்தாமணி வஸ்தி ராணி தலைமை தாங்கினர்.
இயற்பியல் துறை தலைவர் முருகேஸ்வரி ,வேதியியல் துறை தலைவர் சரவணன் தாவரவியல் துறை பேரா.வீரலெட்சுமி,நூலகர் திசாந்த் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். களப்பயணத்தில் விலங்கியல்,தாவரவியல் ,மூலிகை தோட்டம்,வேதியியல் ,இயற்பியல் துறைகளின் ஆய்வகங்களை பார்வையிட்டனர்.நூலகம் சென்று எவ்வாறு நூல்களை அடுக்குவது என்பது குறித்து அறிந்துகொண்டனர். மாணவர்கள் அய்யப்பன், சிரேகா,கீர்த்தியா,நதியா,ஜோயல் ஆகியோர் பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை ஆசிரியை செல்வ மீனாள் மற்றும் ஆசிரியர் கருப்பையா ஆகியோர் செய்திருந்தனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












