கடைக்கு தீ வைத்தவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் அருகுவிளையை சேர்ந்தவர் மணிகண்டன்(32). இவர் அந்த பகுதியில் ஒரு கடை நடத்தி வருகிறார். 28.01.2020 அன்று அதே பகுதியை சேர்ந்த சக்தி @ சக்தி ராஜன்(22) என்பவர் மணிகண்டனிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். மணிகண்டன் தர மறுக்கவே ஆத்திரமடைந்த சக்தி ராஜன் இரவு மணிகண்டன் கடையை அடைத்த பின்பு கடைக்கு தீ வைத்துவிட்டார். தகவல் அறிந்த மணிகண்டன் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த காவல் நிலைய உதவி ஆய்வாளர்  அணில்குமார்  சக்தி ராஜனை கைது செய்து  வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!