மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகமான காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் பரிசளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் பாலமேட்டில், ஜல்லிக்கட்டு போட்டி 16.01.2020 இன்று மாலை 5.00 மணிக்கு நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டில் அதிகமான காளைகளை அடக்கிய சோழவந்தானை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.பாலமேட்டில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு முதல் மூன்று பரிசுகளும், சிறந்த காளைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது. காலை 8 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 676 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது.ஜல்லிக்கட்டு போட்டியின் நிறைவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுயமார், மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி வினய், எஸ்.பி மணிவண்ணன் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

16 காளைகளை பிடித்த பிரபாகரனுக்கு மாருதி கார் பரிசாக அளிக்கப்பட்டது.13 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் ராஜாவுக்கு இரண்டாவது பரிசாக கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டது.10 காளைகளை அடக்கிய கார்த்தி என்ற மாடுபிடி வீரருக்கு மூன்றாவது பரிசு பரிசு வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் வீரர்களின் பிடியில் சிக்காத சிறந்த மூன்று காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் முதல் பரிசு பெற்ற காளையின் உரிமையாளருக்கு காங்கேயம் பசுவும், கன்றுக்குட்டியும் வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசாக காளையின் உரிமையாளர் செல்வத்துக்கு டிவிஎஸ் விக்டர் மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!