அரசுப் பேருந்தின் அவலம் .ஆறு மாதங்களாக விாிசல் விழுந்த கண்ணாடியுடன் ஓட்டும் அரசு ஓட்டுநர்..

அரசு போக்குவரத்து கழகம். ஏர்வாடியில் இருந்து ஈரோடு செல்லும் அரசு புறநகர் பேருந்து தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இதன் முன்பக்க கண்ணாடி  கடந்த ஜூலை மாதம் ஆடி அம்மாவாசை அன்று உடைந்தது எனவும் இதுவரையிலும் கண்ணாடியை சரி செய்ய பலமுறை புகார் கொடுத்தும் இதை வைத்தே ஓட்டுங்கள் என அரசு போக்குவரத்து கழக மேலாளர் கூறியதாக ஓட்டுநர் தகவல் தெரிவித்தார். நாங்கள் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் அச்சமாக உள்ளது .எந்த நேரத்திலும் கண்ணாடி உடைந்து எங்கள் மேலே விழுமோ. பயணிகளுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பது என பயத்துடன்  தகவல் தெரிவித்தார் .பயணிகள் உயிரில் அலட்சியத்துடன் செயல்படும் ராமநாதபுரம் புறநகர் கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் பயணிகள் உயிர்கள் போவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரும் கோரிக்கையாகும் .

செய்தி யாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!