சேதமடைந்த மேம்பாலம். தினசரி அரங்கேறும் விபத்து.. கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்…

மதுரை பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலம் பகுதியில் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் சாலையில் பள்ளங்களும் ஏற்ப்பட்டுள்ளது.இதனால்தினசரி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. தினமும் இரண்டு முதல் மூன்று பகுதிகள் வரை ஏற்பட்டு இதில் சிலர் படுகாயமடைந்து ஆபத்தான நிலைக்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உயிர் பலியும் ஏற்படுகிறது .  இரவு 8 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்தனா்.  உடனடியாக பொதுமக்கள் ஆட்டோவில் அவரை ஏற்றி அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து மதுரை கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியா் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .மதுரை கல்லூரி அருகே உள்ள முத்து மேம்பாலம் வழு இழந்து விட்டதாகவும் இதனால் 10. டன் மேல் அதிகமான பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் அந்த பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது அதற்கு பதிலாக பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து எல்லீஸ் நகர் 70அடி சாலை வழியாக செல்ல வேண்டும் எனறும் அறிவிப்பு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார் .ஆனால் போடி லைன் மேம்பாலம் அதைவிட மிக மிக மோசமாக நிலையில் உள்ளதை மாவட்ட நிர்வாகம் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுக்க வில்லை  என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்லும் பட்சத்தில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலி பாலம் மாறி விடும் நிலை உள்ளது இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை பொதுப்பணித் துறையினரும் மாவட்ட நிர்வாகமும் பாலத்தை சரி செய்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!