செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு சிறார்கள் உட்பட மூவர் கைது

கடந்த 21.12.2019 மற்றும் 22.12.2019 ஆகிய இரண்டு தினங்களில் மதுரை மாநகர் தல்லாகுளம் குற்றப்பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் செல்போன் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று நபர்களை விரைவில் பிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவிட்டதின் பேரில் தல்லாகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்  நாகராஜன் மற்றும் ரோந்து காவலர்களுடன் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களையும்  தேடிச்சென்ற போது மேலமடை சோதனை சாவடி அருகில் இரு சக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி வந்த மூன்று நபர்களையும் பிடித்து விசாரணை செய்ததில் ஒருவர் பெயர் முத்துப்பாண்டி என்றும் மற்ற இரண்டு நபர்கள் சிறார்கள் என தெரியவந்தது மேலும் மூவரும் சேர்ந்து செல்போன் வழிப்பறி குற்றச் சம்பவங்களை செய்ததாக ஒப்புக்கொண்டனர். எனவே மூவரையும் இன்று கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் இரண்டு செல்போன்களும் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!