மதுரை மகளும் விண்வெளி மகளும் !

Press and media peoples association நடத்திய விருது விழாவில் மதுரையை சேர்ந்த பத்ம ஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு  விருது வழங்கப்பட்டது.களஞ்சியம் எனும் சுயவுதவிக்குழுவை ஆரம்பித்து இலட்சக்கணக்கான பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய எளிமை நாயகி பாட்டி சின்னப்பிள்ளை அவர்கள் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முதல் இந்நாள் பிரதமர் வரை அனைவராலும் பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

.ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா எனும் அமைப்பின் மூலம் எண்ணற்ற அறிவியல் விஞ்ஞானிகளை வளர்த்தெடுக்கும் பெண் விஞ்ஞானி திருமதி ஸ்ரீமதி கேசன்   சிறப்பு விருந்த்தினராக கலந்து கொண்டு சிறப்பாக உரையாற்றினார்.இந்த விழாவிற்கான திரைப்பட இயக்குநர் லிங்குசாமி கேள்வி பதில் நிகழ்ச்சியில் மக்களின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்தார்.PMPA மாநில தலைவர்  மெர்தி செந்தில் குமார்  & செயலாளர் ரபீக் அஹமது விருதுகள் வழங்கினார்கள்.இவ்விழாவில் 22 பேருக்கு சாதனையாளர் விருது வழங்க பட்டது வரவேற்பை அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணி வரவேற்றார் தொகுப்புரை செய்தி தொடர்பாளர் சின்னராஜாதொகுத்து வழங்கினார்.

அனைத்து ஏற்பாடுகளையும் PMPA மதுரை மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!