கடன் தொல்லையால் வாலிபர் திருமணமான 15 நாளில் தூக்கிட்டு தற்கொலை .

திருப்பரங்குன்றம் தனியார் விடுதியில் சிதம்பரத்தைச் சேர்ந்த வாலிபர் லட்சக்கணக்கில் கடன் வாங்கி தலைமறைவான நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. கடந்த 29ஆம் தேதி வாலிபர் வாங்கிய கடன் தொல்லை தாங்காமல் அவருடைய தாயாரும் மூத்த சகோதரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது..

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஏழாவது வார்டுக்கு உட்பட்ட காரிய பெருமாள் கோவில் தெருவில் ஆண்டாள் (50) என்பவர் அவரது இரு மகன்களுடன் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார் ..இதில் மூத்த மகன் செல்வக்குமார் (30). இவர் தனியார் மின் சாதன கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் .இவரது தம்பி ராஜ்குமார்(28) சிதம்பரம் நகர்ப்பகுதிகளில் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்த நிலையில் அவர் பல நபர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது ..இந்நிலையில் ராஜ்குமார் கடந்த 15 தினங்களுக்கு முன்பு மதுரை பைக்காரா சேர்ந்த பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார் ..மேலும் தாய் மற்றும் அண்ணனை தனியாக விட்டு சென்றுள்ளார் மேலும் ராஜ்குமார் வைத்திருந்த ஆட்டோவை தவணை கட்டாததால் ஆட்டோவுக்கு finance கொடுத்த பைனான்சியர்கள் எடுத்துச் சென்ற நிலையில் தாய் ஆண்டாளும் மூத்த மகன் செல்வக்குமார் தனியாக வசித்து வந்த நிலையில் இளைய மகன் வாங்கிய கடனைக் கேட்டு வீட்டிற்கு கடன் கொடுத்தவர்கள் தினந்தோறும் சென்று கடன் தொகையை கேட்டு வற்புறுத்தியதாக தெரிகிறது ..இதனால் மனமுடைந்த தாயும் மூத்த சகோதரரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்..இந்நிலையில் ராஜ்குமார் கடந்த 15 தினங்களுக்கு முன்பு திருமணம் முடித்த தன்னுடைய மனைவியை கூட்டிக்கொண்டு மதுரை பகுதிக்கு வந்துள்ளார்.. மேலும் தன்னுடைய தாய் மற்றும் மூத்த சகோதரர் இறந்த செய்தி கேட்டு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.. தன்னுடைய மனைவியை அவருடைய வீட்டில் விட்டுவிட்டு திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள தனியார் விடுதியில் 105 ரூமில் தங்கியுள்ளார்.. நேற்று 02.08.19 மதியம் 2 30 மணி அளவில் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .தகவலறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..கடன் தொல்லையால் அசிங்கம் தாங்காமல் தாய் மற்றும் மூத்த சகோதரர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் புதிதாக திருமணம் முடித்த ராஜ்குமார் தாய் மற்றும் மூத்த சகோதரரின் இறப்பினால் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது செய்தி வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!