முருகப் பெருமானின் முதல் படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக
கொண்டாடுவது வழக்கம், இந்த ஆண்டும் தீபத்திருவிழாவுக்கான கொடியேற்றம் 2/12/2019 காலை 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று துவங்கும் விழா டிச.11ம் தேதி புதன்கிழமை தீர்த்தவாரி உற்சவத்துடன் நிறைவடைகிறது. இதில் டிச.9ம் தேதி பட்டாபிஷேகமும், டிச.10ம் தேதி செவ்வாய்கிழமை முக்கிய நிகழ்வான திருப்பரங்குன்றம் மலை மேல் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி மாலை சுமார் 6 மணியளவில் நடைபெறும். மலையில் தீபம் ஏற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது


You must be logged in to post a comment.