இருசக்கர வாகனத்திலிருந்து தவறிய பணப்பை மீட்டுத் தருமாறு கோரிக்கை

மதுரை மாவட்டம் கீழமாசி வீதி வெங்களகடை தெருவில் மளிகை கடை நடத்தி வரும் சக்கரவர்த்தி என்பவர் 29-ஆம் தேதி இரவு கடையை அடைத்துவிட்டு பணப்பையை இருசக்கர வாகனத்தில் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்பொழுது அலங்கார் தியேட்டர் ஆறுமுகம் மருந்தகம் அருகே வரும்போது பணப்பை கீழே விழுந்து உள்ளது. இதைக் கவனிக்காமல் வீட்டுக்கு சென்று பார்த்த போது பணப்பை   கீழே விழுந்துள்ளது தொியவந்தது.       பின் அங்கே சென்று வரிசையாக தேடும் பொழுது அங்குள்ள ஒரு சிசிடிவியில் பணப்பை விழுங்கும் காட்சி தெரிந்துள்ளது.அந்த பணப்பையை ஒரு தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் வந்து எடுத்துச் செல்வதாக தெளிவாக உள்ளது.அவர் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் அவருடைய வாழ்க்கையே இந்த பணத்தில்தான் உள்ளது. எனவே தயவு செய்து யாரும் எடுத்திருந்தாலும் இவரைப் பற்றி தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றார் .மேலும் இது குறித்து அவர் தெப்பக்குளம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!