மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியைச் சேர்ந்த நாச்சியப்பன் மகன் சுப்பிரமணி ( 52 ).இவர் தனியார் தண்ணீர் விநியோக லாரி ஓட்டி வருகிறார். நேற்று 30.11.19 நள்ளிரவு 1. 40 மணி அளவில் மதுரையிலிருந்து விமான நிலையம் செல்லும் அவனியாபுரம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மதுரை
மாநகராட்சி தண்ணீர் லாரியை ஒப்பந்தப் பணியாளர் சிந்தாமணியை சேர்ந்த சரவணன் ( 53) ஓட்டி ஓட்டி வந்தார் .எதிர் எதிரே வந்த போது ஏற்பட்ட விபத்தில் ஒட்டுனர் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சரவணன் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மதுரை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு வெங்கடேஷன் தலையிமையில் மீட்புப் பணிகளை செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர் விபத்து குறித்து மதுரை நகர விபத்து பிரிவு காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.