விவசாய சங்க பொதுச் செயலாளர் ஈசன் முருகசாமியை விடுதலை செய்ய வலியுறுத்தி உசிலம்பட்டி அருகே விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

 

கோழி பண்ணை விவசாயிகளுக்கு உற்பத்தி விலை உயர்த்தி கொடுக்க வேண்டும், இலவச மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் பகுதியில் விவசாயிகள் கோழிப் பண்ணைகளில் குஞ்சு இறக்க மறுத்து கடந்த வாரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த வாரம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் ஈசன் முருகசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.,

இதனை அடுத்து விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற சூழலில்

இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்டுலுபட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் ஈசன் முருகசாமி மற்றும் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில அமைப்பு செயலாளர் நேதாஜி தலைமையிலான விவசாய சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,

மேலும் கோழிப்பண்ணை விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விவசாய சங்க தலைவர் ஈசன் முருகசாமியை விடுதலை செய்யக்கோரியும், காவல்துறையை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!