மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சிவன்காளைத் தேவர் தெருவில் முத்ரா அறக்கட்டளை என்ற பெயரில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகின்றதுஇதில் மேனெஜராக உள்ளவர் ரத்தினவேல்…அரசு பதிவு பெற்ற நிறுவனம் என்க் கூறப்பட்டாலும் கடன் அட்டையில் பதிவு எண்
குறிப்பிடப்படவில்லை.அலுவலக வாசலில் பெயர் பலகை , முகவரி இல்லை.இந்த பைனான்ஸ் நிறுவனத்தில் மகளிருக்கு மட்டும் கடன் தொகை வழங்குவதாக கூறப்படுகின்றது. 100க்கு 15 சதவிகித வட்டீயும் (பணிபுரியும் ஊழியர் கலா என்பவருக்கு 5 சதவிகிதம் கமிஷன் -மொத்தம் 20 சதவிதம்) பணம் வாரம் தோறும் கட்ட வேண்டுமென்றும் 10 வாரத்திற்குள் கடன் தொகையை முடிக்க வேண்டுமென்ற நிபந்தனையுடன் கடன்வழங்கப்படுகிறது.பெரும்பாலான பெண்கள் அவசரத் தேவைக்காக வீட்டிற்கு கணவருக்கு தெரியாமல் கடன் வாங்குகுகின்றனர்.
குறிப்பிட்ட கால கெடுவிற்குள் முடிக்காவிட்டால் உதாரணத்திற்கு 10 வாரத்தில் ரூ40 ஆயிரத்திற்கு முக்கால்வாசி பணம் கட்டியிருந்தால் பாக்கித்தொகை ரூ.10 ஆயிரம் மீண்டும் புதியதாக சீட்டு போட்டு 20 சதவிகித வட்டி எடுத்துக்கொண்டு வழங்கப்படும்.இதில் கடன் வாங்கும் பெண்கள் வசதிக்காக கூடுதலாக ரூ ஆயிரம் முதல் 5 ஆயிரம் வழங்கப்படும்.இப்படி பல பெண்கள் இந்த பைனான்ஸ் நிறுவனத்தில் வீட்டிற்குத் தெரியாமல் பணம் வாங்கியுள்ளனர். அவர்கள் வாங்கியது சிறு தொகை என்றாலும் மீண்டும் மீண்டும் வட்டி கட்டி அசலை அடைக்க முடியாமல் திணறுகின்றனர்.சிலர் வாங்கிய அசல் ரூ50 ஆயிரம் என்றாலும் ஒரு வருடமாக ரூ.2லட்சம் வரை பணம் கட்டியுள்ளனர்.ஆனால் அசல் ரூ.40 ஆயிரத்திலேயே நிற்கின்றது.இதில் ஒரு வாரம் கட்ட தவறினாலும் நிறுவன ஊழியர் கலா மற்றும் அவரது உறவினர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் பணம் வாங்கியர் எங்கு சென்றாலும் அங்கு தேடிச்சென்று பணம் கேட்டு மிரட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.(இவர்கள் சென்ற போக்குவரத்து செலவையும் கடன் தொகையில் கழிப்பர் என்பது தனிக்கணக்கு)..இந்த கலா உசிலம்பட்டியில் உள்ள திமுக முக்கிய புள்ளியின் உறவினர் என்பதால் இவரை யாரும் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை .இப்படி கணவருக்குத் தெரியாமல் கடன் வாங்கும் பெண்களை மீள முடியா கடனில் ஆழ்த்துகின்றது இந்த பைனான்ஸ் நிறுவனம்.தற்போது பாதிக்கப்பட்ட பெண்கள் உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் மற்றும் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அரசு என்னதான் கடன் கேட்டு மிரட்டினால் சிறை அபராதம் என பல சட்டங்கள் இயற்றினாலும் இது போன்ற பதிவு பெறாத பைனானன்ஸ் நிறுவனங்கள் பெண்களை குறி வைத்து கடன் கொடுத்து அவர்களை தற்கொலைக்கு தூண்டி விடுகின்றது என்பது அப்பட்டமாகத் தெரிகின்றது.மகளிர் பேருந்து மகளிர் உரிமைத்தொகை மகளிர் ஆட்டோ மகளிர் சுயஉதவிக்குழு கடன் என மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திமுக அரசு பெண்களின் இயலாமையை பயன் படுத்தி இது போன்ற தனியார் பைனான்ஸ் நிறுவனங்களின் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பெண்களின் விருப்பமாகும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









