சோழவந்தானில்விவசாய வயல்வெளிகளுக்கு செல்லும் பொது பாதையை இரும்பு வேலி போட்டு அடைத்ததால் பரபரப்பு. பொதுமக்கள் அப்புறப்படுத்தினர்.

சோழவந்தானில் விவசாய வயல்வெளிகளுக்கு செல்லும் பொது பாதையை இரும்பு வேலி போட்டு அடைத்ததால் பரபரப்பு. பொதுமக்கள் அப்புறப்படுத்தினர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை பகுதி முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. பேட்டை 1வது வார்டில் ரைஸ்மில் அருகில் உள்ள பொதுப்பதையை விவசாயிகள் பொதுமக்கள் சிலர் பயன்படுத்தி வந்தனர் இந்த பகுதியில் கால்நடை மேய்ச்சல் செல்லவும்,குடியிருப்பு பகுதிக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தனி நபர் ஒருவர் திடீரென பாதையை மறைத்து கம்பி வேலி அமைத்தாக கூறப்படுகிறது சம்பந்தப்பட்ட தனி நபரிடம் பொதுமக்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொது பாதையை மறித்து அமைக்கப்பட்ட இரும்பு கம்பி வேலியை அகற்றினர். இதனால் அந்த தனிநபர் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இது குறித்து போலீசார் இருதரப்பு நபர்களையும் தங்களிடம் உள்ள ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார் மேலும் தொடர்ந்து விசாரித்து முறைப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். வருவாய்த்துறையினர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு இந்தப் பாதை பொதுப் பாதை தானா அல்லது தனி நபருக்கு உரியதா என்பதை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தானில் பொதுப் பாதையை தனி நபர் ஆக்கிரமித்து பின்பு பொதுமக்கள் அதை அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது காவல்துறை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!