பொங்கல் பரிசுத் தொகை விநியோகம்

உசிலம்பட்டியில் 73,109 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் 3 ஆயிரம் ரொக்க தொகை வழங்கும் பணி துவங்கியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்று இந்த பொங்கல் பரிசு தொகுப்புகள் பயனாளிகளுக்கு வழங்கும் பணி துவங்கியது.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 165 நியாய விலைக்கடைகள் மூலம் சுமார் 73,109 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் பணியை உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட அன்னம்பாரிபட்டி, காளைத்தேவர் நகர் பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில் உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கப்பாண்டியன், உசிலம்பட்டி நகராட்சி பொறுப்பு நகர் மன்ற தலைவர் தேன்மொழி இணைந்து துவக்கி வைத்தனர்.,

தினசரி ஒரு கடைக்கு 250 குடும்ப அட்டைதாரர்கள் வீதம் டோக்கன்கள் வழங்கப்பட்டு, பொங்கல் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி, வேட்டி சேலை, கரும்பு மற்றும் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.,

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!