தெருக்களில் கழிவு நீர் மற்றும் குப்பைகள் தேங்குவதால் சுகாதார கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை செல்லம்பட்டி அருகே கோவிலாங்குளம் ஊராட்சியில் தெருக்களில் கழிவு நீர் மற்றும் குப்பைகள் தேங்குவதால் சுகாதார கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும்

பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி அருகே கோவிலாங்குளம் ஊராட்சியில் செல்லப்பட்டியில் இருந்து விக்கிரமங்கலம் செல்லும் சாலையில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் பல மாதங்களாக தெருக்களில் கழிவுநீர் தேங்கி வெளியேற முடியாமல் இருப்பதாகவும் மேலும் ஊராட்சி சார்பில் குப்பைகள் அல்லாததால் ஆங்காகே குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக பொதுமக்களுக்கு டெங்கு மலேரியா போன்ற காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அடுத்தடுத்து மருத்துவமனைக்கு செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து கோவிலாங்குளம் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் கோவிலாங்குளம் ஊராட்சியில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கும் குப்பைகளை அள்ள முடியாமல் மாத கணக்கில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடப்பதாக கூறுகின்றனர் செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் அருகிலேயே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் இந்த பகுதி பட்டியலின பொதுமக்கள்

நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் எங்கள் பகுதியில் மட்டும் இதுபோன்ற சுகாதாரக் கேடு ஏற்பட்டு இருப்பதாகவும் ஆகையால் செல்லம்பட்டி யூனியன் அதிகாரிகள் மற்றும் கோவிலாங்குளம் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக இந்தப் பகுதியில் தேங்கிய குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் தெருக்களில் தேங்கி கிடக்கும் கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!