வாடிப்பட்டியில்அகில இந்திய ஆக்கி போட்டிஜி.கே.மோட்டார் அணி சாம்பியன் பெற்றது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாடிப்பட்டி ராஜா ஆக்கி அகடமி மற்றும் எவர் கிரேட் ஆக்கி கிளப் இணைந்து ஏ. ஆர். எஸ். டிராபி 2025 ஆக்கித் தந்தை எல்.ராஜூ, உதவி மின் பொறியாளர் வீராசாமி ஆகியோர் நினைவாக அகில இந்திய ஆக்கி போட்டி 5 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 12 அணிகள் விளையாடினர். இதன் இறுதிப் போட்டியில் மதுரை ஜி.கே மோட்டார்ஸ் அணி சென்னை சிட்டி போலீஸ் அணியை 2:1என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் முதல் பரிசு சுழல் கோப்பை மற்றும் ரொக்க பணம் ரூ.50 ஆயிரத்தையும் தட்டிச் சென்றது. இரண்டாம் பரிசு சென்னை சிட்டி போலீஸ் அணிக்கு ரூ.30 ஆயிரமும், சுழல் கோப்பையும், பெங்களூர் எஸ் டி சி அணிக்கு மூன்றாம் பரிசு ரூ.20 ஆயிரம் சுழல் கோப்பையும், பாண்டிச்சேரி குருவி நத்தம் அணிக்கு நான்காம் பரிசு ரூ.10 ஆயிரம் சுழல் கோப்பையும் வழங்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!