சோழவந்தானில் திருமங்கலம் செல்லும் பேருந்து வராததால் நடுராத்திரியில் பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் கட்டி திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பாக திருமங்கலம் உசிலம்பட்டி விக்கிரமங்கலம் செக்கானூரணி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பேருந்துக்காக சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது

சோழவந்தான் பேருந்து நிலையத்தில் இரவு கடைசி பேருந்தாக வந்து செல்லும் பேருந்துகள் சமீப காலமாக வருவதில்லை என கூறப்படுகிறது

இன்று இரவு சோழவந்தானில் இருந்து செக்கானூரணி திருமங்கலம் செல்லும் பயணிகள் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த நிலையில் வரவேண்டிய கடைசி பேருந்து வராததால் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு போன் செய்தனர்

பத்து நிமிடத்தில் வந்து விடும் .15 நிமிடத்தில் வந்து விடும் என காரணம் கூறியதாக கூறப்படுகிறது

ஆனால் 10 மணி ஆகியும் பேருந்து வராத நிலையில் செக்கானூரணி திருமங்கலம் செல்லும் பயணிகள் சிலர் ஆட்டோக்களிலும் சிலர் வேறு வழி இல்லாமல் உறவினர் வீடுகளிலும் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது

சோழவந்தான் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் உச்சபட்ச குளறுபடிகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பேருந்து நிலையத்தில் இரவு பகல் நேரக் காப்பாளர்களை நியமித்து பயணிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை ஏற்படுத்தித் தர வேண்டும்

பேருந்துக்காக பல மணி நேரம் பயணிகள் காத்திருக்கும் அவல நிலையை கருத்தில் கொண்டு முறையாக பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுத்தனர்

இரவு நேரத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பயணிகள் குழந்தைகளை வைத்துக்கொண்டு பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த அவலம் அங்கிருந்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!