சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தேமுதிக சார்பாக விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை. அன்னதானம் நடைபெற்றது.
மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் பாலச்சந்தர் ஆலோசனைப்படி வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தேமுதிக சார்பாக முள்ளிப்பள்ளம் கிராமத்தில் நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலாளர் சோலை சசிகுமார் தலைமை வகித்தார். குருநாதன் முன்னிலை வகித்தார். வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ் அன்னதானத்தை துவக்கி வைத்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் மாரியப்பன் கருப்பையா அம்பலம் கோபால் பாண்டி கண்ணன் ஆறுமுகம் ராம்தாஸ் வெள்ளிமலை முத்துப்பாண்டி கதிர்வேல் சுரேந்திரன் கண்ணன் விஜி மற்றும் தேமுதிக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

