42 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சோழவந்தான் ஆர் சி நடுநிலைப்பள்ளியி 42 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்ட நெகழ்ச்சி சம்பவம் ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆர் சி நடுநிலைப் பள்ளியில் 1984 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு படித்த மாணவ மாணவியர் 42 ஆண்டுகளுக்கு பின்பாக பள்ளி வளாகத்தில் சந்தித்து கொண்டனர். 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற பசுமையான நினைவுகளை தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்களின் மலரும் நினைவுகள் மற்றும் பள்ளி நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவுகூர்ந்து ஒருவருக்கொருவர் தங்களது நட்பை பரிமாறிக் கொண்ட சம்பவம் மிகுந்த நெகழ்ச்சியை ஏற்படுத்தியது

தங்களுக்கு கல்வி மற்றும் வாழ்க்கை கல்வியை பயிற்றுவித்த ஆசிரியர்களை அவர்களின் வீடு தேடி சென்று அழைப்பிதழ் கொடுத்து அழைத்து வந்து அவர்களுக்கு சால்வை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி அவர்களின் ஆசியை பெற்றது அங்கு கூடியிருந்தவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது

தொடர்ந்து தாங்கள் தற்போது உள்ள நிலைமைக்கு இந்த பள்ளி தான் காரணம் என ஒவ்வொருவரும் தங்களது வளர்ச்சி பற்றி எடுத்துக் கூறினார்கள்

தங்களது குழந்தைகள் குடும்பத்தினரை பேச வைத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

1984 ஆம் ஆண்டு படித்தவர்கள் வழக்கறிஞர்கள் இன்ஜினியர்கள் பள்ளி ஆசிரியர்கள் தொழிலதிபர்கள் ஆகியோராக இருப்பது இந்த பள்ளிக்கு பெருமை என ஆசிரியர்கள் பெருமிதம் கொண்டனர்

பள்ளியில் படித்த முன்னாள் மாணவரான காவல்துறையில் பணிபுரிபவரும் சாதாரண விவசாய தொழில் செய்து வருபவரும் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி நலம் விசாரித்து தங்களின் குழந்தைகளை அறிமுகப்படுத்திக் கொண்டது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் சொல்ல முடியாத வார்த்தைகளை ஏற்படுத்தியதுடன் மகிழ்ச்சியையும் உண்டாக்கியது

மேலும் இந்த பள்ளியில் படித்து முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவிகள் வாழ்க்கையிலும் இணைந்து அவரவர் தங்கள் துறைகளில் முன்னேற்றமடைந்து தற்போது இருவரும் பள்ளிக்கு வருகை தந்து தங்களின் வாழ்க்கை அனுபவத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொண்டது அங்கிருந்தவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது இதனைத் தொடர்ந்து அனைவரும் பள்ளி வளாகத்தில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்

தொடர்ந்து ஒவ்வொருவரும் தங்களை ஆரதழுவி தங்களின் நீண்ட கால நட்பு தொடர முயற்சியை மேற்கொண்டனர்

அதனைத் தொடர்ந்து சைவ மற்றும் அசைவ உணவுகள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது

ஒவ்வொரு வருடமும் இதேபோன்று பள்ளியில் கூடி தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வது என முடிவு செய்த முன்னாள் மாணவ மாணவிகள் தங்களால் முடிந்த அளவு தாங்கள் படித்தபள்ளிக்கு உதவிகள் செய்ய முடிவு செய்து அதன்படி இந்த ஆண்டு பள்ளிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கி மகிழ்ந்தனர் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!