வாடிப்பட்டியில் அகில இந்திய அளவிலான ஆக்கி போட்டி தொடக்கம் நான்கு நாட்கள் நடைபெறும் போட்டியில் இந்திய அளவில் பல்வேறு அணிகள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாடிப்பட்டி ராஜா ஹாக்கி அகடமி தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் முன்னாள் உடற்கல்வி இயக்குனர் ராஜீ முன்னாள் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் வீராச்சாமி ஆகியோர் நினைவாக அகில இந்திய ஹாக்கி போட்டி வாடிப்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அணிகளும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகளும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன முன்னாள் ஹாக்கி வீரர் ராஜா விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தார் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வீரர்களை உற்சாகப்படுத்தினார் தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகையும் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக காந்திகிராமத்தில் மரம் நடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள நபருக்கு விருதுகளும் சால்வையும் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் வாடிப்பட்டி சோழவந்தான் மற்றும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஹாக்கி விளையாட்டு வீரர்கள் ரசிகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு போட்டிகளை பார்வையிட்டு செல்கின்றனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!