மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே பொன்னம்மங்கலம் கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் என்பவர் பி சி ஆர் சட்டத்தின் கீழ் கொடுத்த புகாரின் அடிப்படையில்
இக்கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் மீது செக்கானூரணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபர் புகார் அளித்து நேரத்தில் இவர் குற்றம் சாட்டும் நபர்கள் இந்த பகுதியிலேயே இல்லையென்றும், அதற்கான ஆதாரமுள்ளதாகவும் இதனால் பிசிஆர் சட்டத்தின் கீழ் போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக் கோரியும் ,பிசிஆர் சட்டத்தை தவறான வழியில் பயன்படுத்துவதை கண்டித்தும் , அமைதியாக இருக்கும் கிராமத்தில் தேவையில்லாமல் சிலர் ஜாதி கலவரத்தை தூண்டுவதாகவும் கூறி தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான சங்கிலி தலைமையில் பொன்னம்மங்கலம் கிராம மக்கள் சுமார் 100க்கும் மேற்ப்பட்டோர் உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரனிடம் பிசிஆர் வழக்கை ரத்து செய்யக்கோரி மனு அளித்தனர்.

