மதுரை மாவட்டம்உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் கழிவு நீர் வகனம் உரிய அனுமதி இன்றி இருந்ததால் மற்றும் உரிமம் புதுப்பிக்காமல் இருந்ததால் நகராட்சி நிர்வாகம் 4 கழிவு நீர் வாகனங்களை கைப்பற்றி அபரதாம் விதித்தது.
உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரம் துறை அதிகாரிகள் கழிவு நீர் வாகனங்களை சோதனையில் உரிய அனுமதி இன்றி கழிவு நீர் வாகனம் மற்றும் செப்டிக் டேங்க் கிளினிக் வாகனம் உரிமம் இல்லாமல் நகராட்சி பகுதியில் இருந்தது.
இதனைத் கண்டு அறிந்து உரிய உரிமம் பெறும் வரை 4 கழிவு நீர் வாகனங்களை இயக்காமல் இருக்க அறிவுறுத்தி அபரதாம் விதிக்கப்பட்டது. நகராட்சி ஆணையாளர் இளவரசன் சுகாதார துறை அதிகாரி சிவக்குமார் கழிவு நீர் வாகனங்களுக்கு அபரதாம் விதித்தனர். நகராட்சி அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் கழிவு நீர் எடுப்பது தொடர்பாக 14420 என்ற இலவச எண்ணியில் தொடர்பு கொள்ள நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

