மதுரை மாவட்டம்உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீராம் மஹாலில் கள்ளர் காமன் பண்ட் பொதுநிதி அமைப்பு பதிவு செய்யப்பட்ட நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடந்தது.மதுரை மாவட்ட கள்ளர் பள்ளிகள் முன்னாள் மாணவர்கள் நலச்சங்கம் மற்றும் கள்ளர் பள்ளி மீட்புக் குழு சார்பாக
உசிலம்பட்டியில் கள்ளர் பொது நிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கில் மூத்த வழக்கறிஞர் கே. சுரேந்திரன் தலைமையில் சி. நேதாஜி, பா. அண்ணாதுரை, செல்வ பிரித்தா ஆகியோர் முன்னிலையில் சிறப்புரையாக வழக்கறிஞர்கள் கே. போஸ், இ தாமரைச் செல்வன், பி. பார்த்திபன், சி. செல்வம் வி. கணேசன் பொன்னுச்சாமி பொறியாளர் சுருளி தேனி அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கள்ளர் பள்ளிகள் முன்னாள் மாணவர்கள் நல சங்கம் மற்றும் கள்ளர் பள்ளி மீட்பு குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நன்றி உரை பி ராஜா கூறினார். கருத்தரங்கிற்கு ஏற்பாடுகளை எம் .ஜெயபால், டி. சின்னன்,எம். முருகன் ஆகியோர் செய்து இருந்தனர்.

