உசிலம்பட்டி சி.எஸ்.ஐ ஆலயத்தில் ஞாயிறு பள்ளி கிறிஸ்மஸ் மரவிழாவை சபையின் குருவானவர் ஜான்சன் கார்ட்டர் தலைமையேற்று ஜெபத்துடன் தொடக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் சிறு பிள்ளைகள் கிறிஸ்து பிறப்பு நாடகத்தையும் கிறிஸ்மஸ் பாடல்களையும் பாடி நடன கலைநிகழ்ச்சி நடத்தி கொண்டாடினர்.
இந்த கிறிஸ்மஸ் நிகழ்ச்சியை உசிலம்பட்டி சி.எஸ்.ஐ ஞாயிறு பள்ளி இயக்குனர் சி.எஸ்.ஐ ஆலயம் மாமன்ற உறுப்பினர் ஜீவா பிரேம் சந்தர் அனைவரையும் வரவேற்றார். ஞாயிறு பள்ளி பொறுப்பாளர் டாக்டர் பிரியங்கா ஏஞ்சலின். வதனா .ஸ்வீட்டி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். கிறிஸ்துமஸ் மரவிழாவில் கலந்து கொண்ட அனைத்து சிறு பிள்ளைகளுக்கும் சபையின் செயலாளர் துரைப்பாண்டி பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். கமிட்டி உறுப்பினர் அட்வகேட் மோனிடா கேத்தரின் நன்றி கூறினார் .

