மதுரையில் மொட்டைமாடியில் துணி காய வைத்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற திமுக இளைஞர் அணி பிரமுகர் கைது

மதுரை மாவட்டம் துவரிமான் கீழத்தெருவை சேர்ந்தவர் கருணாகரன்(31).இவர் திமுக இளைஞர் அணி நிர்வாகியாக உள்ளார்.இந்த நிலையில்அதே ஊரில் களத்து மேட்டு தெருவில் வசித்து வரும் பானிப்பூரி வியாபாரம் செய்து வரும் சக்கரவர்த்தி என்பவர் மனைவி ராதிகா (34),

கணவர் பானிப்பூரி வியாபாரத்திற்கு சென்ற நிலையில் வீட்டில் தனிமையில் இருப்பதையறிந்த கருணாகரன் அங்கு சென்று மொட்டை மாடியில் துவைத்த துணிகளை காயவைத்துக் கொண்டிருந்த போது அங்கு சென்ற கருணாகரன் தான் அணிந்திருந்த சட்டை மற்றும் வேஸ்டியை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக நின்று ராதிகாவை பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகின்றது.

கருணாகரணின் இந்த செயலை கண்டு அதிர்ச்சியடைந்து ராதிகா கூச்சலிட்டு அலறியவாறு சத்தம் போட்டு உள்ளார்.

இதனையறிந்த அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

இதனையறிந்த கருணாகரன் அங்கிருந்து தப்பிய ஓடியதாக கூறப்படுகிறது.

உடனடியாக சம்பவம் குறித்து ராதிகா சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்

புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கருணாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை துவரிமான் பகுதியில் திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்ததன் அடிப்படையில் காவல்துறை கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்திருந்த சமயத்தில் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!