மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேற்று முன்தினம் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது பல்வேறு குளறுபடிக்கு மத்தியில் வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்காமல் பாதியிலேயே கிளம்பிச் சென்றதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பியது குறிப்பாக சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்று மற்றும் இரண்டாவது வார்டு பொதுமக்கள் மற்றும் ஐந்தாவது வார்டில் உள்ள வைத்தியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எம்எல்ஏ மீது கடும் அதிருப்தி அடைந்தனர் மேலும் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு டிபன் பாக்ஸ் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது இதனை தொடர்ந்து நேற்று காலை சோழவந்தான் அருகே முள்ளி ப்பள்ளம் ஊராட்சிக்கு டிபன் பாக்ஸ் வழங்க வந்த எம் எல் ஏ பேசுகையில்
கடைசி வரை டிபன் பாக்ஸ் வழங்காமல் எம்எல்ஏ ஓடிவிட்டார் என ஜெயா பிளஸ் செய்தியில் வந்துள்ளது எனக்கூறி கடைசி வரை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சென்றார்


You must be logged in to post a comment.