தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை இணைத்து செயல்படும் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு பேரணி நடைபெற இருப்பதாக மாநில பொருளாளரும், மாநில ஒருங்கிணைப்பாளர் மதுரை ப. செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இ

கிராம ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும்,ஊதியம் அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டும், கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குனர் சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு மாத சம்பளம் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும், கிராம ஊராட்சியில் பணியாற்றும் சுகாதார உறுப்பினர்களுக்கு மாதம் ஊதியம் 2000 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு மாதம் ரூ 10,000 ஓய்வு தினம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற உள்ளது. வருகிற டிசம்பர் 19ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை சிந்தாதரி பேட்டை ரவுண்டானாவில் இருந்து பேரணி புறப்பட்டு எலும்பு ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் முடிவடைகிறது .இந்த பேரணிக்கு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்க உள்ளார்.. துணை ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் முன்னிலையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர் மாநில தலைவர் பொன்னிவளவன் பேரணியை துவங்கி வைக்கிறார் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களில் பிரநிதிகள் வாழ்த்துரை வழங்க உள்ளனர் இறுதியில் பேரணி நிறைவு செய்து மோசை கணேசன் உரையாடுகிறார் எனவும், அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாநில ஒருங்கிணைப்பாளரும்,மாநில பொருளாளருமான மதுரை ப. செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


You must be logged in to post a comment.