மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக மத்திய அரசை கண்டித்து அகில இந்திய விவசாய சங்கங்கள் சார்பாக நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது மாவட்டத் தலைவர் வேல்பாண்டி தலைமை தாங்கினார்.மாநில தலைவர் ரவீந்திரன் மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினார். விதை மசோதா 2025 ரத்து செய், மின்சார திருத்த சட்டம் 2025 ரத்து செய், தொழிலாளர் நலச் சட்டங்கள் நான்கு தொகுப்புகள் ஆக்கியதை திரும்பப்பெறு என்று கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் குருசாமி ,ரத்தினம், கந்தவேல் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.