மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி 79 பிறந்த நாள் விழா உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற குழு தலைவர் அன்னை சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி தலைவர் டி. சரவணகுமார் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம். மகேந்திரன் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இவ்விழாவில் ஏ. எல். விஜயகாந்தன் , முன்னாள் நகரத் தலைவர் காந்தி சரவணன் நகரச் செயலாளர் தினகரன் செல்லம்பட்டி வட்டார தலைவர் செந்தில்குமார் தொழிற்சங்க நிர்வாகி பிரேம் ஆனந்தன் இளைஞர் காங்கிரஸ் இளங்கோ ராஜா, தமிழ்மாறன், பாலகிருஷ்ணன், ஜெய்சிங்கம், செல்லக்கண்ணு, முத்துக்கண்ணன், தொழிற்சங்க நிர்வாகிகள் சிவ முரளிதரன், சரவணகுமார், ரவீந்திரன், மற்றும் அரசப்பன், சுரேஷ், ராஜ்குமார், தொண்டர் முருகேசன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர் .

