மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அமல் படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.,
சுமார் 800 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வரும் இந்த துவக்கப்பள்ளியில் காலை உணவை ஓர் இடத்தில் அமர்ந்து உணவருந்த நிழல் இல்லாத நிலையை அறிந்த மதுரையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவன தலைவர் குருசாமி, சுமார் 2 லட்சம் மதிப்பீட்டில் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவை நிழலில் அமர்ந்து உணவருந்தும் வண்ணம் மேற்கூரை அமைத்துக் கொடுத்த சம்பவம் பலரின் பாராட்டை பெற்றது.,
இன்று இந்த பள்ளியில் மேற்கூரை திறப்பு விழா மற்றும் குழந்தைகள் தினவிழா பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு தலைமையில் நடைபெற்றது, சிறப்பு விருந்தினர்களாக உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், மேற்கூரை அமைத்து கொடுத்த தனியார் தொண்டு நிறுவன தலைவர் குருசாமி மாணவ மாணவிகளுடன் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.,
தொடர்ந்து குழந்தைகள் தினவிழாவில் ஜவஹர்லால் நேரு குறித்த பேச்சுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், பங்களிப்பு செய்த மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினர்., தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன., ஆசிரியர்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.,

