அலங்காநல்லூர் அருகே சின்ன இழந்த குளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் சரியான இடத்தில் அமைக்காததால் நீச்சல் குளம் போல காட்சி அளிக்கிறது. டென்னிஸ் வாலிபால் கபடி உள்ளிட்டவைகள் விளையாட கட்டப்பட்ட முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் வயல்வெளி நீர் சூழ்ந்து நீச்சல் குளம் போல காட்சி அளிக்கிறது.இந்த நீச்சல் குளம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்ற போது அருகில் இருந்த பொதுமக்கள் நீர்வழிப் பாதையில் கட்டுவதால் எந்த பயனும் இல்லை என அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனால் அருகில் கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கம் என்ற பெயரில் நூறு கோடி செலவில் கட்டும் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதற்கு செல்லும் சாலை என்பதால் இந்த இடத்தில் பல கோடி மதிப்பில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் கட்டும் பணி தொடங்கப்பட்டு தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் மைதானத்தை திறந்து வைத்தார்.
ஆனால் சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக விளையாட்டு மைதானத்திற்குள் மழை நீர் புகுந்து இடுப்பளவு தண்ணீர் காணப்படுகிறது இதனால் என்ன நோக்கத்திற்காக விளையாட்டு மைதானம் கட்டப்பட்டதோ
அந்த நோக்கம் நிறைவேறாமல் பயனற்று இருப்பதாக இளைஞர்கள் மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
மேலும் அருகில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் குடியிருந்து வரும் நிலையில் விளையாட்டு மைதானத்திற்குள் புகுந்த மழை நீர் குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்
நீர் வழித்தடத்தில் விளையாட்டு மைதானம் கட்டியதால் மாணவர்கள் இளைஞர்களுக்கும் பயனற்றும் குடியிருப்பு பகுதி அருகே கட்டியதால் குடியிருப்பு வாசிகளும் சிரமப்படுவதாக இந்தப் பகுதியில் குடியிருப்பவர்கள்
கூறி வருவது வேதனை தருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்
திமுக அரசின் பல திட்டங்களில் மதுரை மாவட்டத்தில் கட்டப்பட்ட ஒரே விளையாட்டு மைதானமான அலங்காநல்லூர் சின்ன இலந்தைகுளம் விளையாட்டு மைதானமும் பயனற்று கிடப்பது அந்த பகுதி வழியாக செல்லும் பொது மக்களை கவலை அடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் குளம் போல் தேங்கி இருந்த விளையாட்டு மைதானத்தை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார் அப்போது முன்னாள் எம்எல்ஏக்கள் எம்வி கருப்பையா மாணிக்கம் அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் வாவிடமருதூர் குமார் முடுவார்பட்டி ஜெயச்சந்திர மணியன் புதுப்பட்டி கிளை செயலாளர் பாண்டுரங்கன் வழக்கறிஞர் காசிநாதன் நாட்டாமை சுந்தர் ராகவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்


You must be logged in to post a comment.