மதுரை மாவட்டம்உசிலம்பட்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு மறுசீரமைப்பு இயக்கம் சார்பில், ஆலோசனைக் கூட்டம் மேலிடப் பார்வையாளரும், தெலுங்கானா மாநில வக்ப்போர்டு தலைவருமான சையத் அஸ்மத்துல்லா ஹுசைன் தலைமையில் நடந்தது.
சிவகாசி எம். எல். ஏ., அசோகன், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி, பகுதி நிர்வாகிகளிடம் தனித்தனியாக கட்சியின் வளர்ச்சி, 2026 தேர்தலை எதிர்கொள்ள தேவையான ஆயத்தப்பணிகள், மாவட்ட அளவில் தலைவர்கள் உள்ளிட நிர்வாகிகள் பதவிக்கு யாரை தேர்வு செய்யலாம் போன்றவை குறித்து ஆலோசித்தனர்.


You must be logged in to post a comment.